தமிழ்நாட்டில் முதன்முறையாக ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் அறிமுகம் !

தமிழ்நாட்டில் முதன்முறையாக ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் அறிமுகம் !

ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் அறிமுகம்* தமிழ்நாட்டில் முதன்முறையாக ஸ்மார்ட் ஆம்புலன்ஸ்  தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் போக்குவரத்து காவல்துறையானது சாலை விதிகளில் பல மாற்றங்களை கொண்டு வந்து பல திட்டங்களை மேற்கொண்டு பணியாற்றி வருகிறது. சென்னையில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்படுவது ,சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் , வாகன ஓட்டிகளின் வேகங்களைக் குறைப்பது ,  போன்ற  திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம்  சாலையில்  ஏற்படும் விபத்துகளைப் போக்குவரத்து காவல்துறை குறைத்துக் கொண்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது  சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் தொழில்நுட்பம் அறிமுகம் செய்துள்ளது. சென்னையில்  சில இடங்களில் தொழில்நுட்ப வசதியுடன் 16 சிக்னல்களில் 25 ஆம்புலன்கள் சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் அவசரகால ஆம்புலன்கள் வரும்பொழுது சிக்னல்களில் எச்சரிக்கை செய்யப்படும். இதன் மூலம் உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு சென்றடையும். மேலும் வாகன ஓட்டிகள் ஆம்புலன்ஸ்க்கு வழி விட்டு வாகனங்களை இயக்கலாம். இதன் மூலம் விபத்துக்கள் குறைக்கப்படுகின்றன.. மேலும் ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் தொழில்நுட்பம் அறிமுகத் திட்டத்தினை சென்னையில் 40 சிக்னல்களில் விரிவுபடுத்த சென்னை போக்குவரத்து காவல்துறை திட்டமிட்டுள்ளது.

Related post

சென்னை ஐகோர்ட்டுக்கு 30 நாட்கள் விடுமுறை !

சென்னை ஐகோர்ட்டுக்கு 30 நாட்கள் விடுமுறை !

சென்னை உயர் நீதிமன்றத்திற்குக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மே 1-ஆம் தேதி முதல் ஜூன்-2ஆம் தேதி வரை 30 நாட்கள் எனக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. சென்னை உயர்நீதிமன்ற…
சென்னை தி நகரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் !

சென்னை தி நகரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் !

சென்னை தி.நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகரில் தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பால கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளதால்…
சென்னையில் 47ஆவது வருட புத்தகக் கண்காட்சி!

சென்னையில் 47ஆவது வருட புத்தகக் கண்காட்சி!

சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் 47 ஆவது வருட புத்தகக் கண்காட்சி தமிழக முதலமைச்சர் ஜனவரி 3ஆம் தேதி திறந்து வைக்கிறார். தமிழ் ஆங்கில…