தமிழ்நாட்டில் நவம்பர் 30ஆம் தேதி வலுவான புயல்!

தமிழ்நாட்டில் நவம்பர் 30ஆம் தேதி வலுவான புயல்!

இந்த வருடம் வடகிழக்கு பருவமழை தாமதமாகவே தொடங்கியது. இதுவரை எந்த வித புயலும் ஏற்படவில்லை.சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை விட்டு விட்டு பெய்து வருகிறது . மேலும் கடலோர மாவட்டங்களில் கனமழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த ஓரிரு நாட்களில் நவம்பர் 29ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக்கப்பட்டு அடுத்த 48 மணி நேரத்தில் வலுவான புயலாக மாறும்,தெற்கு அந்தமான் கடல் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதிகளில் நவம்பர் 30ஆம் தேதி வலுவான புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

 இதன் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட திருவள்ளூர் ,விழுப்புரம் சிவகங்கை, ராமநாதபுரம் புதுச்சேரி போன்ற மாவட்டங்களில் உருவாகியுள்ள வலுவான புயலின் காரணத்தால் கன மழை பெய்யும்‌ என வானிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Related post

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இன்று (9 தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை) 7…
தமிழ்நாட்டில்  நவம்பர் 22 முதல் 26ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் நவம்பர் 22 முதல் 26ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் 22 முதல் 24ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு . தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர்…