தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் 22 முதல் 24ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு . தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர் ,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,,விழுப்புரம் ,கடலூர், மயிலாடுதுறை நாகப்பட்டினம், திருவாரூர் ,தஞ்சாவூர் மற்றும் காரைக்கால் புதுச்சேரி போன்ற மாவட்டங்களிலும் மிதமானது முதல் பரவலான மழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 22, 24 தேதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை , ராயப்பேட்டை, சேப்பாக்கம் மெரினா கடற்கரை போன்ற கடலோர பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நவம்பர் 20 இன்று முதல் நம்பர் 26 ஆம் தேதி வரை சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.