தமிழ்நாட்டில் சரஸ்வதி பூஜை,ஆயுத பூஜையை முன்னிட்டு கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

தமிழ்நாட்டில் சரஸ்வதி பூஜை,ஆயுத பூஜையை முன்னிட்டு கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

தமிழ்நாட்டில் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜையை முன்னிட்டு கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வருகிற அக்டோபர் 23 ,24 நாட்களில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு விடுமுறை வருவதால் சொந்த ஊருக்கு செல்ல பொதுமக்கள் பயணிப்பதற்காக கூடுதலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் இருந்து கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், வேதாரண்யம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி மற்றும் காரைக்குடி, ராமநாதபுரம் போன்ற பகுதிகளுக்கு 300 பேருந்துகள் இயக்கப்படும் என்றும்,சொந்த ஊருக்கு பொதுமக்கள் செல்ல வசதியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருப்பூர், மதுரை, கோயம்புத்தூர் போன்ற பகுதிகளுக்கும், புதுக்கோட்டை, காரைக்குடி, வேளாங்கண்ணி மற்றும் தஞ்சாவூர், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளுக்கும் 200 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என்று தமிழகப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும் பயணிகள் www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது.இதன் காரணமாக ஏப்ரல் 17,18 ஆம் தேதிகளில் சென்னையில் தினசரி இயக்கப்படும்…
புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் –  தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!

புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – தமிழக அரசு…

கிறிஸ்தவர்களின் பண்டிகையாக புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது. இந்த வருடம்( மார்ச் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை) புனித வெள்ளி முன்னிட்டு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 30, 31 தேதிகளில்…
சபரி மலைக்குச் செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகள்!

சபரி மலைக்குச் செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகள்!

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பக்தர்கள் ஏராளமானோர் கார்த்திகை மாதங்களில் வருவது வழக்கம். இந்நிலையில் சென்னை திருச்சி ,மதுரை, கடலூர் ,புதுச்சேரி போன்ற மாவட்டங்களில் இருந்து பக்தர்கள்…