தமிழ்நாட்டில் அனைத்து சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேக சிறப்பு வழிபாடு!

தமிழ்நாட்டில் அனைத்து சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேக சிறப்பு வழிபாடு!

தமிழ்நாட்டில் அனைத்து சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேக சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் பௌர்ணமி தினமான( அக்டோபர் 28 )இன்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த திருநாளில் சிவபெருமானின் கோயிலுக்குச்சென்று வழிபட்டால் பஞ்சபூதங்களை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு தமிழ்நாட்டில் சிவன் ஆலயங்களான தஞ்சை பெரிய கோயில், திருவண்ணாமலை ,கங்கை சோழ பிரகதீஸ்வரர் ஆகிய கோயில்களிலும் அன்னாபிஷேகம் ,சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறுகின்றன.

எனவே இதை காண்பதற்காக பக்தர்கள் கூட்டம் இன்று காலை முதலே அலை மோதி வருகிறது. சந்திர கிரகணம் அக்டோபர் 28 இன்று இரவு நிகழ இருப்பதால் அனைத்து சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேகம் வழிபாடு நேரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

Related post