தமிழ்நாட்டின் விஞ்ஞானி வீர முத்துவேலுக்கு விஞ்ஞான் பிரதீபா விருது!

தமிழ்நாட்டின் விஞ்ஞானி  வீர முத்துவேலுக்கு விஞ்ஞான் பிரதீபா விருது!

தமிழ்நாட்டின் விஞ்ஞானி வீர முத்துவேலுக்கு விஞ்ஞான் பிரதீபா விருது வழங்கி மத்திய அரசானது கௌரவித்துள்ளது.  போபாலில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலிங் எனும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சினை விஞ்ஞான் பாரத் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்திரயான்- 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுக்கு விஞ்ஞான் பிரதீபா விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் சந்திரயான்- 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்து உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்ததுள்ளது.  இதனைக்கண்டு சந்திரயான்- 3 விண்கலத்தின் திட்ட இயக்குனர் வீர முத்துவேலை  உலகம் முழுவதும் பாராட்டி வருகின்றனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த வீர முத்துவேல் வந்தேபாரத் ரயில் திட்டத்தில் திட்ட இயக்குனராக இருந்ததற்காகவும் ,இஸ்ரோ அறிவியல் ஆராய்ச்சி விண்வெளி துறையில் நுழைந்து சந்திரயான் 3 விண்கலத்தின் திட்டப் பணிகளை  மேற்கொண்டு சாதனை நிகழ்த்தியதற்காக விஞ்ஞான் பிரதீபா விருது  வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது என்பதையும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த விருதைப் பெற்று வீர முத்துவேல் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

Related post

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பக்தர்கள்  விமானத்தில் செல்ல மத்திய அரசு ஒப்புதல்!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பக்தர்கள் விமானத்தில் செல்ல மத்திய அரசு ஒப்புதல்!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பக்தர்கள் விமானத்தில் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. வருகிற (2024) ஜனவரி 15ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. கேரள மாநிலத்தில்…
ரயில்வே ஊழியர்களுக்கு  மகிழ்ச்சியான செய்தி!

ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மத்திய அரசின் அதிரடியான அறிவிப்பு. டெல்லியில் (அக்டோபர் 18)நேற்றைய தினம் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில்…
பள்ளிமாணவர்களுக்கான அபார் கார்டு(APAAR CARD) வழங்கும் திட்டம் -மத்திய அரசின் புதிய அறிவிப்பு

பள்ளிமாணவர்களுக்கான அபார் கார்டு(APAAR CARD) வழங்கும் திட்டம் -மத்திய அரசின் புதிய…

ஆதார் கார்டு போலவே பள்ளிமாணவர்களுக்கான அபார் கார்டு வழங்கும் திட்டத்தினை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.. தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் 12 இலக்க எண் கொண்ட ஆதார்…