தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு பிரபல தொழில் நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேற்றம்!

தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு பிரபல தொழில் நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேற்றம்!

தமிழ்நாட்டில் சென்னை நந்தனத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு (2024 ஜனவரி 7, 8) தேதிகளில் நடைபெற்றது.. இந்த மாநாட்டில் 30,000 பிரதிநிதிகள் பங்கேற்று உள்ளனர். இந்த மாநாட்டில் பல திட்டங்களைத் தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இந்த மாநாட்டில் ஹீட்டாய் நிறுவனம்5600 கோடி ,அமெரிக்க சோலார் நிறுவனம் 5, 600 கோடி , கோத்ராஜ் நிறுவனம் 515 கோடி , டாடா எலக்ட்ரானிக் நிறுவனம் 12, 082 கோடி, JSW நிறுவனம்10,000 கோடி, TVSகுழுமம் 5000 கோடி முதலீடுகள் எனப் பல்வேறு பிரபல தொழில் நிறுவனங்கள் தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சர் முன்னிலையில் 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. பிரபல தொழில் நிறுவனங்களின் பல கோடிகள் முதலீடு செய்யப்பட்டுள்ளன . இதனால் தமிழக மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகளவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related post