தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தொடரை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்

தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தொடரை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்  தாக்கல் செய்தார்

தமிழக சட்டப்பேரவையில் (பிப்ரவரி 20 )இன்று வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் தொடரை தாக்கல் செய்தார். வேளாண் துறையில் தமிழக அரசு செய்த நல திட்டங்களைத் தொகுத்து வழங்கினார். கடந்த நிதியாண்டில் 116 . 91 லட்சம் மெட்ரிக் டன் உணவுப்பொருள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் மொத்த சாகுபடி பரப்பு 155 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது என்று அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் 1.50,000 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

நடபாண்டில் தமிழக விவசாயிகளுக்கு 50,000 மின்இணைப்புகள் வழங்கப்படும் என அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மன்னுயிர் காத்து ‘மன்னுயிர் காப்போம்’ எனும் திட்டத்தைத் தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.இயற்கை சீற்றங்களிலிருந்து மீண்டு வர பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் தமிழக அரசு விவசாயிகளுக்கு உதவி செய்து வருகிறது என்றார். மேலும் கடந்த ஆண்டு வேளாண் துறையில் 38 .904நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு ரூபாய் 42 ,281.88 கோடி நிதி ஒதுக்கீடு கூடுதலாக செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Related post

‘ மன்னுயிர் காப்போம் திட்டம்’ அறிமுகம் – வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவிப்பு

‘ மன்னுயிர் காப்போம் திட்டம்’ அறிமுகம் – வேளாண் துறை அமைச்சர்…

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தொடரை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். இதன் முக்கிய அம்சங்களில் மன்னுயிர் காப்போம் திட்டம் தொடங்கப்படும் ,…