மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. இந் நிலையில் பாஜக மூன்றாவது முறையாக பதவி ஏற்கிறது. தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது.
இதையொட்டி நாடாளுமன்ற கூட்டுத்தொடர் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டுத் தொடர் இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ளதால் இந்திய எம்பிக்கள் பதவியேற்கின்றனர்.
இந்த சிறப்புக் கூட்டத்தொடரில் தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப் புதிய எம்பிகளுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இந் நிலையில் தமிழகத்தின் விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 39 எம்பிக்கள் ஜூன் 25ஆம் தேதி(நாளை) பகல் 1 மணி முதல் 3 மணிக்குள் பதவி ஏற்கிறோம். என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.