தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான அஞ்சல் கணக்கு சேமிப்பு விழா தொடக்கம்!

தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான அஞ்சல் கணக்கு சேமிப்பு விழா தொடக்கம்!

கோடை விடுமுறைக்குப் பின்பு ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.தொடர்ந்து மாணவர்களுக்கான புத்தகங்கள், சீருடைகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந் நிலையில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கான அஞ்சல் சேமிப்பு கணக்கு தொடக்க விழா, பள்ளியிலேயே ஆதார் பதிவு செய்யும் திட்டத்திற்கான தொடக்க விழாவும் சென்னை ஆலந்தூர் ஏ ஜே எஸ் மேல்நிலைப் பள்ளியில் திங்கட்கிழமை நடைபெற்றது .

இதில் சிறப்பு விருந்தினராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார்.இதைத்தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 24-ஆம் தேதி தொடங்க அதில், மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஏராளமான புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

Related post