தமிழக அரசு கல்லூரிகளில் 4000 பேராசிரியர்கள் நியமனம் செய்ய தேர்வு!

தமிழக அரசு கல்லூரிகளில் 4000  பேராசிரியர்கள் நியமனம் செய்ய தேர்வு!

 

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு ,கலை அறிவியல் சார்ந்த கல்லூரிகளில் 4000 உதவிப் பேராசிரியர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்பி தமிழக மக்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 

அதன்படி மார்ச் 28ஆம் தேதி முதல்ஏப்ரல் 29ஆம் தேதி வரை உதவிப் பேராசிரியர் பணிகளில் சேர எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது . விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து வருகிற ஆகஸ்ட் 4ஆம் தேதி உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வினை எழுதலாம் என்று தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Related post