சென்னை திருவான்மியூரில் (ஜூலை 3) இன்று இரண்டாவது கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக தேர்ச்சி பெற்ற முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளைப் பாராட்டி நடிகர் விஜய் பரிசளித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர் நீட் தேர்வினால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாடு! ஒரே தேர்தல்! ஒரே தேர்வு என்பது மாணவர்களுக்கு எதிரானது என்று விஜய் தெரிவித்தார்.
தற்போது நீட் தேர்வால் நடந்த குளறுபடிகள் காரணமாக மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்றார் நடிகர் விஜய். கல்வியானது பொதுப்பட்டியிலிருந்து மாநில பட்டியலில் கொண்டுவரப்பட வேண்டும் என்றார், பின்பு ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஏற்றவாறு பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்தார் . நீட் தேர்வு விலக்கு என்பது சரியான தீர்வு என்றும் தமிழக அரசின் சட்டப்பேரவையில் நடைபெற்ற தீர்மானத்தை வரவேற்கிறேன் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தெரிவித்தார்.