தமிழக அமைச்சரவை கூட்டம் ஜூலை 22 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது!

தமிழக அமைச்சரவை கூட்டம் ஜூலை 22 ஆம் தேதி  நடைபெறவிருக்கிறது!

தமிழக அமைச்சரவை கூட்டம் ஜூலை 22 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் ஜூலை 22 ஆம் தேதி காலை 10:30 மணியளவில்  நடைபெறவுள்ளது. இந்த  அமைச்சரவை கூட்டத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் ஒப்பந்தங்களுக்கான ஒப்புதல் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

மக்கள் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்திற்கான நடவடிக்கைகள், விலைவாசி ஏற்றம், ஆளுநர் செயல்பாடு, அமலாக்கத்துறை நடவடிக்கைகள், நாடாளுமன்ற தேர்தல் குறித்து சட்டப்பேரவையில் துறைவாரியாக தெரிவிக்கப்பட்ட புதிய திட்டங்களைப் பற்றிய ஆலோசனைகள் குறித்தும் விவாதித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தமிழக அரசு  தெரிவித்துள்ளது. மேலும் ஜூலை 22 ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டத்திற்கு தமிழக அரசின் சார்பாக அமைச்சர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related post

சட்டம் ஒழுங்கு குறித்து காவல்துறையினரும் தமிழக முதலமைச்சரும் ஆலோசனை கூட்டம்!

சட்டம் ஒழுங்கு குறித்து காவல்துறையினரும் தமிழக முதலமைச்சரும் ஆலோசனை கூட்டம்!

சென்னை தலைமை செயலகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஜூலை 11,12ஆம் தேதி சட்ட ஒழுங்கு…
பெரம்பலூர் காலணிகள் தொழிற்சாலை பூங்கா நவம்பர் 28ஆம் தேதி  திறப்பு!

பெரம்பலூர் காலணிகள் தொழிற்சாலை பூங்கா நவம்பர் 28ஆம் தேதி திறப்பு!

பெரம்பலூர் மாவட்டத்தில் பீனிக்ஸ் கோதாரி நிறுவனம் காலணி தொழிற்சாலை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது . இந்தத் தொழிற்சாலையை 2022 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்…
நீலகிரி வரையாடு திட்டத்தினை இன்று தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

நீலகிரி வரையாடு திட்டத்தினை இன்று தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை தலைமை செயலகத்தில் நீலகரி வரையாடு திட்டத்தினை (12.10.2023) இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. தமிழ்நாட்டில் அழிந்து வரும் வனவிலங்குகளின் இனத்தை பாதுகாக்கவும், அவற்றின் வாழ்விடத்தை…