தமிழகத்தில் 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது .

தமிழகத்தில் 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது .

தமிழகத்தில் 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு 5 காவல் துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது வழங்கப்பட உள்ளதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காவல் அதிகாரிகளான விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் கோ. சாங்சாய், சென்னை எஸ்.பி.காசி விஸ்வநாதன், செங்குன்றம் காவல் ஆய்வாளர் முனியசாமி, மதுரை எஸ் ஐ பாண்டியன், தலைமை காவலர் ரங்கநாதன் ஆகிய ஐந்து அதிகாரிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2024 வருகிற வருடம் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று மதுவிலக்கு அமலாக்க பிரிவில் சிறப்பாக பணியாற்றிய ஐந்து அதிகாரிகளுக்கும் காந்தியடிகள் காவல் விருது வழங்கப்படும் என்றும், மேலும் ரூபாய் 40 ஆயிரம் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

Related post