தமிழகத்தில் மார்ச் 3ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும்!

தமிழகத்தில் மார்ச் 3ஆம் தேதி  போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும்!

 தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் மார்ச் 3ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் எனப் பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் 43 ஆயிரம் இடங்களில் தேர்வு செய்யப்பட்டு நடைபெற உள்ளன. .இந்த முகாம்களின் மூலம் 57 லட்சம் குழந்தைகளுக்கு இளம்பிள்ளை வாத நோயை வராமல் தடுப்பதற்கான போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. 

போலியோ சொட்டு மருந்தானது1 முதல் 5 வரை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த முகாம்கள் மார்ச் 3ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. எனவே 1 முதல் 5 வரை உள்ள அனைத்து குழந்தைகளும் போலியோ சொட்டு மருந்தினை வழங்குவது நமது கடமையாகும்!

Related post