தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு 800 சிறப்பு பேருந்துகள்!

தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு 800 சிறப்பு பேருந்துகள்!

தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என விரைவு போக்குவரத்து கழகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. இஸ்லாமியர்களின் தூதுவரான இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூறும் விழாவாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாளை (ஜூன் 29) ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடிக்கப்படுகிறது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தனது சொந்த ஊருக்கு செல்ல பயணிப்பதால் ஏற்படும் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன எனப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. எனவே (ஜூன் 28) இன்று தினசரி பேருந்துகளுடன் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு மொத்தம் போக்குவரத்து கழகத்தின் சார்பாக 800 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சிறப்பு பேருந்துகள் திட்டமிட்டபடியே இயக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க அலுவலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பக்ரீத் பண்டிகை மற்றும் சனி, ஞாயிறு கிழமைகளில் தொடர் விடுமுறை காரணமாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்களின் பயன்பாட்டிற்காக (ஜூன் 28) இன்று இரவே  11. 15 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன ‌.

Related post

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது.இதன் காரணமாக ஏப்ரல் 17,18 ஆம் தேதிகளில் சென்னையில் தினசரி இயக்கப்படும்…
புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் –  தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!

புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – தமிழக அரசு…

கிறிஸ்தவர்களின் பண்டிகையாக புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது. இந்த வருடம்( மார்ச் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை) புனித வெள்ளி முன்னிட்டு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 30, 31 தேதிகளில்…
சபரி மலைக்குச் செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகள்!

சபரி மலைக்குச் செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகள்!

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பக்தர்கள் ஏராளமானோர் கார்த்திகை மாதங்களில் வருவது வழக்கம். இந்நிலையில் சென்னை திருச்சி ,மதுரை, கடலூர் ,புதுச்சேரி போன்ற மாவட்டங்களில் இருந்து பக்தர்கள்…