தமிழகத்தில் கூவம் நதியைச் சீரமைக்க 1500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு!

தமிழகத்தில் கூவம் நதியைச் சீரமைக்க 1500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு!

சென்னை கிண்டியில் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 2.0 நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையைத் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது உதயநிதி ஸ்டாலின் ” காலநிலையைச் சிறப்பாக கையாலும் மாநிலமாக தமிழ்நாடு உருவாக்க அனைவரும் ஒன்றுபட உழைக்க வேண்டும்” எனப் பேசத் தொடங்கினார். அதன் பிறகு தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தை உருவாக்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், நீலகிரி, கோவை, ராஜபாளையம், ராமேஸ்வரம் ஆகிய நகரங்களும் சமநிலை மாற்றுத்திட்டங்களில் செயலில் உள்ளன என்று தெரிவித்தார்.

அதன் பிறகு தமிழகத்தில் நீர் நிலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன, கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பதைத் தடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூவம் நதியைச் சீரமைக்க, 1,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Related post

பொங்கல்  பண்டிகைக்கான இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் ரூபாய் 200 கோடி நிதி ஒதுக்கீடு!

பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் ரூபாய் 200…

பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூபாய் 200 கோடி நிதி ஒதுக்கீடு! பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி ,சேலை வழங்கு திட்டத்திற்கு  ரூபாய் 200…