தமிழகத்தில் கழுகுகள் பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை !

தமிழகத்தில் கழுகுகள் பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை !

தமிழகத்தில் கோவை , நீலகிரி ,திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கழுகுகள் அதிகளவில் வாழ்கின்றன. NIMUSLIDE, FLUNIXIN மற்றும் CARPROFEN ஆகிய மருந்துகளைச் சட்டவிரோதமான மருந்துகளைச் செலுத்தி உயிரிழக்க செய்து கழுகுகள் மற்றும் வனவிலங்குகளைச் சிலர் மாமிசமாக உட்கொள்கின்றனர். 1980-இல் இந்தியாவில் 4 கோடி கழுகுகள் இருந்த நிலையில் தற்போது 19,000 கழுகுகள் மட்டுமே இருப்பதாக வனவிலங்குகள் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. எனவே அந்த மருந்துகளுக்கு மத்திய மாநில அரசு தடை விதிக்க வேண்டும் என்றும்,(Eagles Conservation Centre )கழுகுகள் பாதுகாப்பு மையம் அமைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கானது நேற்றைய தினம் ஏப்ரல் 3-ஆம் தேதி தேதி கங்காபூர்வலா மற்றும் சத்தியநாராயண பிரசாந்த் தலைமை அமர்வில் விசாரணை செய்த போது மத்திய ,மாநில அரசுகளின் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ஜூன்-5 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்ட வழக்கில் மத்திய மாநில அரசுகள் மனு தாக்கல் செய்யாவிட்டால் ஒன்றிய அரசுக்கு 25000 அபராதம் விதிக்கப்படும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related post