தமிழகத்தில் இன்று பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளியின் விலை!

தமிழகத்தில் இன்று பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளியின் விலை!

தமிழகத்தில் இன்று பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளியின் விலை ரூ 60 க்கு விற்கப்படுகிறது எனக் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்தார்.  வெயிலின் தாக்கம் காரணமாக தக்காளியின் விளைச்சல் பாதிக்கப்பட்டதும், வெளிமாநிலங்களில் தக்காளியின் வரவு குறைக்கப்பட்டது. இதனால் கோயம்பேடு காய்கறி அங்காடி சந்தைக்கு தினமும் 800 டன்னாக இருந்த தக்காளியின் வரத்து 300 டன்னாக குறைந்துள்ளது. இதன் காரணமாக  தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக ஒரு 1 கிலோ தக்காளியின் விலை 60 ரூபாய்க்கு மேலாக அதிகமான விலையில் விற்கப்பட்டது.  சில்லறை விற்பனை கடைகளில் தக்காளியின் விலை ஒரு கிலோ தக்காளியின் விலை ரூபாய் 90, 100 க்கு விற்கப்பட்டதில் மக்கள் பெரும் அவதி அடைந்தனர்.

இந்த நிலையின் காரணமாக தக்காளியின் விலையை கட்டுப்படுத்த கூட்டுறவு துறை அமைச்சர் தலைமையில் நேற்று ஆலோசனை  மேற்கொள்ளப்பட்டது.  இதன்படி தமிழகத்தில் இன்று 62 பண்ணை பசுமை கடைகளிலும் கொள்முதல் விலையில் ஒரு கிலோ தக்காளி             ₹ 60க்கு விற்பனை செய்யப்படும் எனக் கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்தார். இந்த விலை உயர்வை பயன்படுத்தி தக்காளியைப் பதுக்கி வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அரசு  எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related post