ஆவின் நிறுவனம் தான் உற்பத்தி செய்யும் நான்கு வகையான ஐஸ்கிரீன்களின் வகையை உயர்த்தி உள்ளது. ஆவின் நிறுவனத்தில் சாக்கோபார், பால் (Ball) வெண்ணிலா, கோன் வெண்ணிலா, கிளாசிக் கோன் சாக்லெட் உள்ளிட்ட ஐஸ்கிரீம் விலையை உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.
குறிப்பாக ஐஸ்கிரீம் விலை 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை விலை உயர்த்தி ஆவின் விளக்கம் அளித்துள்ளது. இதனை சுற்றறிக்கையாக ஆவின் நிர்வாகமானது அனைத்து ஐஸ்கிரீம் விற்பனையாரிடம் அனுப்பி வைத்துள்ளது.