தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்திற்கு 404 கோடி ஒதுக்கீடு!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்திற்கு 404 கோடி ஒதுக்கீடு!

 தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக காலை சிற்றுண்டி உணவு திட்டத்தில் ரூபாய் 404 கோடி தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசாணை (4.7.23) அன்று வெளியிட்டுள்ளது. கடந்த 2022 ஆம் வருடம் மே மாதம் 7 ஆம் தேதி சட்டசபையில் விதி எண் 110 படி சிற்றுண்டி திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிமுகப்படுத்தினார். இதைத்தொடர்ந்து தற்போதைய 2023-24 கல்வியாண்டில் 30ஆயிரத்து 122 அரசு தொடக்கப்பள்ளிகளில் சிற்றுண்டி உணவுத்திட்டம் விரிவு படுத்தப்பட்டது.  1ஆம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரை  அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக  சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தச் சிற்றுண்டி திட்டத்தினால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரம் தகவல்களைத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் செயல்பட்டு வரும் 3 1, 008 அரசு பள்ளிகளில் பயின்று வரும் 15,75,900 லட்சத்து மாணவர்கள் பயனடைவர். தமிழ்நாட்டில் திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காலை உணவு வழங்கும் திட்டத்தால்  மாணவர்களின் சேர்க்கை 100  சதவிகிதமாக அதிகரித்துள்ளது.  இந்தத் திட்டம் மூலம் ஒரு மாணவருக்கு ₹12.71 ரூபாய் வரை ஒரு நாளைக்கு செலவீடப்படுகிறது. மேலும் வாரத்திற்கு 2 நாட்கள் சிறு தானியங்கள் கொண்டு உணவு தயாரிக்கப்படும் எனக் காலை சிற்றுண்டி திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related post

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஸ்மார்ட் போர்டுகள் வழங்கப்படுகின்றன!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஸ்மார்ட்…

 தமிழகத்தில் 22,418 அரசு தொடக்கப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துவதற்காக அனைத்து அரசு பள்ளிகளிலும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஸ்மார்ட் போடுகள் வழங்கப்படுகின்றன. இதற்கான ஸ்மார்ட்…
தமிழக அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் வருகை அதிகரிப்பு!

தமிழக அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் வருகை அதிகரிப்பு!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வருகை அதிகரித்து வருகிறது. கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசு பல சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசால் அரசு…
தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் மார்ச் 1ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கப்படும்

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் மார்ச் 1ஆம் தேதி முதல் மாணவர்…

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் மார்ச் 1ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்காக தரமான…