தமிழகத்தின் கடலோர பகுதியை கடக்கும் மிக்ஜாம் புயல்!

தமிழகத்தின் கடலோர பகுதியை கடக்கும் மிக்ஜாம் புயல்!

வடக்கிழக்கு பருவக்காற்று காரணமாக வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் தற்போது வலுவான புயலாக மாறி உள்ளது. இதற்கு மிக்ஜாம் புயல் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.இந்தப் புயலானது நாளை 3ஆம் தேதி வலுப்பெற்று, 4 -ஆம் தேதி காலை தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் புதுவை கடலோர பகுதிகளில் நிலவக்கூடும்.

இதன் வேகம் 100 கிலோ மீட்டராக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயலின் காரணமாக கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் என்பதால் மீனவர்களுக்கு கடலுக்குச் செல்லக்கூடாது! என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த புயல் நாளை மறுநாள் டிசம்பர் 5 ஆம்தேதி சென்னை -மசூலிப்பட்டினம் அருகே கடப்பதாக இருந்த நிலையில் இதன் வேகம் குறைந்ததால் நெல்லூர் அருகே கரையே கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . மேலும் இந்தப் புயலால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிக அதிகமான கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related post

தமிழகத்தில் சிறப்பு வணிக கடன் திட்ட முகாம்கள்!

தமிழகத்தில் சிறப்பு வணிக கடன் திட்ட முகாம்கள்!

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் போன்ற 4 மாவட்டங்களில் சிறு தொழில்கள் செய்யும் மக்களின் வாழ்வாதாரம் சேதமடைந்த நிலையில் மீட்பதற்காக அரசு பல…
சென்னை தலைமை செயலகத்தில் மத்திய குழுவுடன் தமிழக முதலமைச்சர் ஆலோசனை!

சென்னை தலைமை செயலகத்தில் மத்திய குழுவுடன் தமிழக முதலமைச்சர் ஆலோசனை!

மிக்ஜாம் புயல் காரணமாக பாதிப்படைந்த பகுதிகளை மத்திய குழு வருகை தந்து இரண்டு நாட்களாக ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் மிக்ஜாம் புயலின் பேரிடர் மீட்பு பணியைக் குறித்து…
தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் தமிழக முதலமைச்சர்!

தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் தமிழக முதலமைச்சர்!

மிக்ஜாம் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறந்த முறையில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையைத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சி சென்னையிலுள்ள ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. சென்னை…