தமிழகத்தின் அரசு பள்ளிகளில் ஆய்வு – அமைச்சர் !

தமிழகத்தின் அரசு பள்ளிகளில் ஆய்வு  –  அமைச்சர் !

 தமிழகத்தின் அரசு பள்ளிகளில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் 234 தொகுதிகளிலுள்ள அரசு பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வினை நடத்தி வருகிறார்.  தமிழகம் முழுவதும் 234/77ஆய்வு பயணத் திட்டத்தின் கீழ் தொகுதி வாரியாக அரசு பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.அதன்படியே தமிழகத்தில் 48 தொகுதிகளிலும் ஆய்வினை நடத்தியுள்ளார். தற்போது கோவை மாவட்டம் தொண்டா முத்தூர் தொகுதியில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைc பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் நிர்வாகத்தின் கோரிக்கைகளைக் கேட்டு அறிந்தார். மேலும் பள்ளிகளின் அடிப்படை கட்டுமானம், மாணவர்களின் சுற்றுச்சூழல் மேம்பாடு, கழிவறை வசதிகளைப் பார்வையிட்டு ஆய்வினை மேற்கொண்டார். மேலும் மாணவர்களிடம் கலந்துரையாடி மாணவர்களின் கல்வி கற்றல் திறனைக் கண்டறிந்தார். மேலும் மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து மாணவர்களுக்கான மடிக்கணினி விரைந்து வழங்கப்படும் எனப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  தெரிவித்தார்.

Related post

தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கான புதிய செயலி அறிமுகம்- அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கான புதிய செயலி அறிமுகம்- அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் அனைத்து ஆசிரியர்களுக்கான புதிய செயலி அறிமுகம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும், பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் குறைதீர்க்கும்…
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு. தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகள் இயங்கும். விடுமுறை நாட்களான சனிக்கிழமை நாளை பள்ளிக்கு விடுமுறை கிடையாது…