தமிழகத்ததில் மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக டாஸ்மார்க் நிர்வாகம் அறிவிப்பு!

தமிழகத்ததில் மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக டாஸ்மார்க் நிர்வாகம் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் (பிப்ரவரி 1) இன்று முதல் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு வாணிப கழகம் கீழ் 4829 டாஸ்மார்க் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் டாஸ்மார்க் கடைகளில் அனைத்து வகையான மதுபானங்களின் விலை இன்று உயர்த்தப்படுகின்றன. 180 மில்லி அளவுக்கு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர குவாட்டர் பாட்டிலின் விலை ரூபாய் 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி அளவு கொண்ட உயர்ரக குவாட்டர் பாட்டில் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கி, ஒயின், டெகிலா மற்றும் உள்ளூர் ஒயின் விற்பனை விலையில் மாற்றமில்லை. மேலும் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயர்வு காரணமாக புதிய விலைப்பட்டியலை வைக்க பணியாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Related post