தனி ஒருவன் திரைப் படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தேர்வு!

தனி ஒருவன் திரைப் படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தேர்வு!

நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தை மோகன்ராஜ் இயக்குகிறார். தனி ஒருவன் முதல் பாகம் 2015இல் வெளிவந்து 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இத்திரைப்படத்தில் அரவிந்த்சாமி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தனது தனித்திறமையைக் காட்டியிருப்பார். இவரின் நடிப்பு தனி ஒருவன் திரைப்படத்திற்கு வெற்றியாக அமைந்தது. . இந்த வெற்றியைத் தொடர்ந்து தனி ஒருவன் இரணடாம் பாகம் உருவாகும் என்று இயக்குனர் மோகன் ராஜ் தெரிவித்துள்ளார். இதில் ஜெயம் ரவி, நடிகை நயன்தாராவும் நடிக்க உள்ளனர் .

இந்த நிலையில் அரவிந்த்சாமி கதாபாத்திற்கு பதிலாக மிகப்பெரிய வில்லனாக மிரட்டலாக நடிப்பிற்குப் பிரபல பாலிவுட் முன்னணி நடிகர் அபிஷேக் பச்சன் தேர்வாகியுள்ளார். இதை தனி ஒருவன் திரைப்படத்தின் இயக்குனர் மோகன் ராஜ்தெரிவித்துள்ளார் இந்த நிலையில் முதல் பாகத்தை போல் தனி ஒருவன் இரண்டாம் பாகம் மெகா பிளாக் திரைப்படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related post