தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் கண் பரிசோதனை செய்யப்படும்- மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.

தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் கண் பரிசோதனை செய்யப்படும்- மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.

சென்னை மாநகரத்தில் ‘மெட்ராஸ் ஐ’ எனும் கண் நோய் அதிகளவில் பரவி வருகிறது. எனவே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கண் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். மெட்ராஸ் ஐ ஒரு வகையான வைரஸ் நோய் .எனவே இந்த கண் நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடம்பில் உள்ள வைரஸின் மூலம் தும்பல், இரும்பல் அவர்கள் பயன்படுத்திய பொருட்களில் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.

 இந்நோயைக் கட்டுக்குள் கொண்டு வர சென்னையில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு செப்டம்பர் 16ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை கண் பரிசோதனை செய்யப்படும் என மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கண் பரிசோதனை செய்யப்பட்டு இதற்கான மருந்துகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ‘மெட்ராஸ் ஐ’பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கண் மருந்துகளை மட்டும் பயன்படுத்த வேண்டும் எனத் தமிழக அரசனானது அறிவுறுத்தியுள்ளது.

Related post