தஞ்சை திருவையாற்றில் சத்ரகுரு தியாகராஜர் ஆராதனை விழா கோலாகலம்!

தஞ்சை திருவையாற்றில்  சத்ரகுரு தியாகராஜர் ஆராதனை விழா கோலாகலம்!

தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் 177 ஆவது தியாகராஜர் ஆராதனை விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆராதனை விழா ( ஜனவரி 26 )ஆம் தேதி சிட்டி யூனியன் வங்கி தலைவர் காமகோடி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து ஜனவரி 30 ஆம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பாக வெகு விமரிசையாக நடைபெறும்.

இவ்விழாவில் பிரபல கலைஞர்களின் வாய்பாட்டும், பிரபல நாதஸ்வர கலைஞர்களும், பிரபல வீணை, வயலின், புல்லாங்குழல் இசைக் கலைஞர்களும் தினமும் பங்கேற்று இசை பெற்று வருகின்றன நடைபெற்று வருகிறது. இந்த தியாகராஜ ஆராதனை விழா இறுதி நாளான ஜனவரி 30 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related post