டெல்லி கேப்பிட்டல்ஸ் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

டெல்லி கேப்பிட்டல்ஸ் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

ஐ.பி.எல் தொடர் 16 சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 5 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மே இரண்டாம் தேதி  44 ஆவது போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் குஜராத் -டெல்லி  இடையே நடைபெற்றது. இந்நிலையில் டாஸ் வென்ற டெல்லி அணியானது பேட்டிங்கைத் தேர்வு செய்தது‌. இதன் தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் 2 ரன்கள், ரைல்  ரூசா 8 ரன்கள், மணிஷ் பாண்டே 1 ரன், மற்றும் பிரியம் கர்க் 10 ரன்கள் , என ரன்கள் எடுத்தனர். ஆட்டத்தில் அக்ஸர் படேல்27 ரன்கள் மற்றும் அமான் கான் 51 ரன்கள், என பார்ட்னர் ஷிப் அமைத்து நல்ல ஸ்கோரினை உயர்த்தி 19ஆவது ஓவரில் ஆட்டத்தினை இழந்தனர்.

இறுதியாக டெல்லி அணியானது 20 ஓவரில் 130 ரன்கள் எடுத்து ஆட்டத்தினை முடித்தது. எனவே 131 ரன்கள் எடுக்க களமிறங்கி குஜராத் அணியானது  ஏமாற்றத்தையே சந்தித்தது. 20 ஓவர்  முடிவில் 125 ரன்கள் அடித்து குஜராத் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. எனவே புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ்  த்ரில் வெற்றி பெற்றது.

 

Related post

சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி!

சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி!

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் 16 ஆவது தொடரின் இறுதிப்போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த ஞாயிறு…
சூர்யகுமார்	யாதவ்	அதிரடி	ஆட்டம்! மும்பை இந்தியன்ஸ் அணி  அபார வெற்றி !

சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டம்! மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி…

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் நடந்து முடிந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து…
சென்னை அணியின்  7ஆவது வெற்றி !  டெல்லி அணியின் 7ஆவது தோல்வி!

சென்னை அணியின் 7ஆவது வெற்றி ! டெல்லி அணியின் 7ஆவது தோல்வி!

ஐ.பி.எல் தொடரின் 55ஆவது லீக் போட்டியில்  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இப் போட்டியில்…