டெல்லியில் 69 தேசிய திரைப்பட விருதுகள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.

டெல்லியில் 69 தேசிய திரைப்பட விருதுகள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.

டெல்லியில் விஞ்ஞான் பவனில் நேற்று 69-ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தேசிய விருதுகளை வழங்கினார்.2021 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படத்திற்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. நடிகர் மாதவன் இயக்கிய ராக்கெட் -நி தம்பி எஃபெக்ட் ,புஷ்பா , ஆர் ஆர் ஆர் திரைப்படத்திற்கான விருதுகள் வழங்கப்பட்டன. புஷ்பா திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்டது.

மேலும் கடைசி விவசாயி படத்தில் பாடியதற்காக ஸ்ரேயா கோசல், கருவறை திரைப்படத்தில் இசையமைப்பாளரான ஸ்ரீகாந்த் தேவாவுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் பாலிவுட் நடிகரான அலியா பட், ரன்பீர் கபூர் போன்ற நடிகர்களுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணையமைச்சர்கள் டாக்டர்கள் எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். சினிமா துறையில் வெற்றி பெற்றதற்காக பாராட்டுகளைத் தெரிவித்து குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார்.

Related post

50 ஆவது ஜி.எஸ்.டி  கவுன்சில் கூட்டம்!

50 ஆவது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்!

50 ஆவது ஜி.எஸ்.டி  கவுன்சில் கூட்டம். ஜூலை 11ஆம் தேதி ஜி.எஸ்.டி கவுன்சிலின் 50ஆவது கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறுகிறது. இந்த  ஜி.எஸ்.டி…