டெல்லியில் ஜி 20 மாநாடு-கோலாகலம்!

டெல்லியில் ஜி 20 மாநாடு-கோலாகலம்!

இந்தியாவின் தலைநகரமான புது டெல்லியில் ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. செப்டம்பர் 9 ,10 தேதிகளில் புதுடெல்லியில் ஜி- 20 மாநாடு மிக சிறப்பாக நடைபெறவிருக்கிறது.  இந்த மாநாட்டில் பல நாடுகள் பங்கேற்கின்றனர்.  20 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், பிற நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.இந்த  மாநாட்டில் எரிசக்தி பரிமாற்றம், பருவநிலை மாற்றம், சர்வதேச பிரச்சனைகள் குறித்து பிரதிநிதிகள் விவாதிக்க உள்ளனர்.ஜி- 20 மாநாடு  நடைபெறுவதை முன்னிட்டு டெல்லியில் மாநகர காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் விமானப்படை மூலம் வான் வழியே பலத்த கண்காணிப்பும் போடப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபரான ஜோ பைடனும் மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று இந்தியா வந்துள்ளார்.

ஜி-20 மாநாட்டில் நடைபெறுவதற்காக மத்திய அரசானது பள்ளி, கல்லூரிகள், மற்றும் அரசு அலுவலர்களுக்கு செப்டம்பர் 8 முதல் 10ஆம் தேதி வரை விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது. , மேலும் வர்த்தக சார்ந்த நிறுவனங்களான டெலிவரி நிறுவனங்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கு மூன்று நாட்களுக்கு தடை விதித்துள்ளது. இந்த மாநாட்டிற்காக பிரகதி மைதானத்தில் பாரத மண்டபத்தின் முன்பு 18 டன் எடையுள்ள அஷ்ட தாதுக்களால் 28 அடி உயர நடராஜர் சிலை நிறுவப்பட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைநகரமான புது டெல்லி மாநகரமே ஜி- 20 மாநாட்டிற்காக மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு தயாராகி வருகிறது.

Related post

பூமித்தாயைப் பராமரிப்பது நமது கடமை  -பிரதமர் மோடி!

பூமித்தாயைப் பராமரிப்பது நமது கடமை -பிரதமர் மோடி!

பூமித்தாயைப் பராமரிப்பது நமது கடமை -பிரதமர் மோடி. பூமித்தாயைப் பராமரிப்பது நமது கடமை எனப் பிரதமர் மோடி ஜி-20 மாநாட்டில் உரையாற்றியுள்ளார். தற்போது ஜி-20 மாநாடு பல்வேறு நகரங்களில்…
சென்னையில் இன்று ஜி 20 மாநாடு!

சென்னையில் இன்று ஜி 20 மாநாடு!

சென்னையில் இன்று ஜி 20 மாநாடு  நடைபெறுகிறது. ஜி 20 மாநாடு  பேரிடர் பாதுகாப்பு மாநாடு இன்று சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு ஜூலை (24 ,25 )…