டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்காக தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் 1000 சிறப்பு முகாம்கள்!

டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்காக தமிழகத்தில் அக்டோபர் 1 முதல்  1000 சிறப்பு முகாம்கள்!

தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்காக 1000 சிறப்பு முகாம்கள்  நடத்தப்படும் என்று  சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாகவே மழை பெய்து வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சலை பரப்பும்   ஏடிஎஸ் கொசு வகைகள் பெருமளவில் அதிகரித்து வருகின்றன. இதனால் தமிழ்நாட்டில், சென்னை, திருவள்ளூர், திருவாரூர், காஞ்சிபுரம் புதுச்சேரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  எனவே டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்காக தமிழக அரசானது பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி தமிழகத்தில் 1000 சிறப்பு முகாம்கள் வருகிற அக்டோபர் 1ஆம் தேதி நடத்தப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் அனைவரும் தனது சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ளும்படி  கேட்டுகொண்டுள்ளது.   ஏதேனும் காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறி இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது.

Related post

பொது சுகாதாரத்துறை டெங்கு  காய்ச்சல் பரவுவதைத்  தடுக்க நடவடிக்கை!

பொது சுகாதாரத்துறை டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை!

பொது சுகாதாரத்துறை டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை. தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை உட்பட பல இடங்களில் சாலைகளிலும், தெருக்களிலும்…