டி20 கிரிக்கெட் தொடர் ஜூன் 23 நேற்றைய தினம் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட் பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தார். எனினும் 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. அடுத்ததாக 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய மகளிர் அணி விளையாடியது.
ஸ்மிரிதி மந்தனாவுடன், கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் அபாரமாக விளையாடிய தென் ஆப்பிரிக்க பந்துவீச்சைசிதறடித்தனர். இறுதியாக 40.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு இந்திய மகளிர் அணி 220 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.