டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அபார வெற்றி!

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ்  அபார வெற்றி!

டி.என்.பி.எல் கிரிக்கெட்டில் இறுதிப் போட்டி சுற்றில் நெல்லை ராயல் கிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. (ஜூலை 10) அன்று நெல்லை ராயல் கிங்ஸ் அணி மற்றும் திண்டுக்கல் டிராகன்  இடையே போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் டாஸ் வென்ற நெல்லை அணி   பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் படி திண்டுக்கல் டிராகன் பேட்டிங் செய்தது. இந்த ஆட்டத்தில் 20 ஓவர்களில் திண்டுக்கல் அணி 185 ரன்கள் ஸ்கோர் செய்திருந்தது. எனவே 186 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி நெல்லை அணி களமிறங்கியது. நெல்லை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் அருண் கார்த்திக் மற்றும் கஜேந்திரன் பொறுமையாகவும் அதிரடியாகவும் ஆடினர். அஜித் தேஷ், நிதீஷ் ராஜகோபால் போன்றோர் ஆட்டத்தில் ஆடினர்.  

20 ஓவர்களில் நான்கு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரித்திக் ஈஸ்வரன் சிக்ஸர் அடித்து ஆட்டத்தினை அசத்தல் ஆக்கினார். இதன் மூலம் நெல்லை ராயல் கிங்ஸ் கிங்ஸ் அபார வெற்றி கண்டு 2 குவாலியர் சுற்றில் இறுதிப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே டி.என்.பி.எல் கிரிக்கெட் இறுதிப் போட்டி (ஜூலை 12) ஆம் தேதி லைக்கா கோவை கிங்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் இடையே மோதல் நடைபெற உள்ளது.

Related post

ஆசிய சாம்பியன் ஹாக்கி போட்டி இந்திய அணி வெற்றி!

ஆசிய சாம்பியன் ஹாக்கி போட்டி இந்திய அணி வெற்றி!

ஆசிய சாம்பியன் ஹாக்கி போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் 7-ஆவது ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்…
டி.என். பி.எல்  சுற்றில்  கோவை- திண்டுக்கல் மோதல்!

டி.என். பி.எல் சுற்றில் கோவை- திண்டுக்கல் மோதல்!

 டி.என். பி.எல்  சுற்றில்  கோவை- திண்டுக்கல் மோதல்;  ஏழாவது   டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 8அணிகள் பங்கேற்றனர்.…