டாஸ்மார்க் கடைகளில் கூடுதலாக விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது பணியிடை நீக்கம் !

டாஸ்மார்க் கடைகளில் கூடுதலாக விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது  பணியிடை நீக்கம் !

டாஸ்மார்க் கடைகளில் கூடுதலாக விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது பணியிடை நீக்கம். நடவடிக்கை தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன.  டாஸ்மார்க் கடைகளில் கூடுதலாக ரூ10 அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது எனப் புகார் எழுந்து வருகின்றன. மதுபான சில்லறை விற்பனை கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக வசூலிக்கும் பணியாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு தற்கால பணியிடை நீக்கம் செய்யப்படும் என டாஸ்மார்க் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக அமைச்சர் முத்துசாமி கூடுதலாக விலையில் மதுபானங்கள் விற்கும் ஊழியர்களைப் பணியிட மாற்றம் செய்து அபராதம் விதித்துள்ளார். இதைத்தொடர்ந்து டாஸ்மார்க் மேலாளர் இயக்குனர் அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கைகளைப் பற்றி மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related post