1993 இல் வெளிவந்த ஜென்டில்மேன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஜென்டில்மேன் 2 படப்பிடிப்பு இன்று (அக்டோபர் 9தேதி) தொடங்கப்படுகிறது. ஜென்டில்மேன் திரைப்படத்தில் சேத்தன் சீனு கதாநாயகனாக நடிக்க உள்ளார். கதாநாயகியாக மலையாள நடிகை நயன்தாரா சக்கரவர்த்தி நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தினைக் கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார், ஜென்டில்மேன் 2 திரைப்படத்தை கே.டி குஞ்சுமோகன் தயாரிக்கிறார்.
ஜென்டில்மேன் 2 திரைப்படத்தில் வைரமுத்து பாடல் வரிகளிலும் கீரவாணி பின்னணி இசையில் அமைக்கப்படுகிறது. இந்தத் திரைப்படத்தைச் சத்யா ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கிறது. தகவல் ஒளிபரப்பு மற்றும் செயல் துறை அமைச்சர் சாமிநாதன் ஜென்டில்மேன் 2 திரைப்படத்தை மகிழ்ச்சியுடன் தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்