ஜூலை 3சர்வதேச பிளாஸ்டிக் பை ஒழிப்பு தினம்!

ஜூலை 3சர்வதேச பிளாஸ்டிக் பை ஒழிப்பு தினம்!

இந்தியாவில் ஜூலை 3-ஆம் தேதி சர்வதேச பிளாஸ்டிக் பை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பை ஒழிப்பு தினம் பற்றிய விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்றன. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிளாஸ்டிக் தவிர்ப்பு பற்றி விழிப்பு பேரணி நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் விழிப்புணர் பேரணியைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்! துணி பைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது . இந்த மாவட்டத்தின் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்று பிளாஸ்டிக் பை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

 

Related post