சர்வதேச யோகா தினம் ஜூன் 21 இன்று நாடு முழுவதும் கொண்டாட்டம் ! இந்தியா முழுவதும் சர்வதேச யோகா தினம் (ஜூன் 21) இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி “மக்களுக்கு யோகா பயிற்சி உடலுக்கு ஆற்றலைத் தருகிறது என்றும், தினமும் யோகா செய்வதால் உடலுக்கு அதிகமான சக்தி கிடைக்கிறது என்றும், இந்த யோகா தினம் உலகில் உள்ள அனைவருக்கும் புத்துணர்ச்சியை அளிப்பதாக” எனத் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முயற்சியால் கடந்த 9 ஆண்டுகளில் யோகா பயிற்சி உலகில் அனைத்து பகுதிகளிலும் சென்றடைந்துள்ளது. இந்த வருடம் 2023 (ஜூன் 21) இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா.சபையின் தலைமையகத்தில் நடைபெற உள்ள யோகா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதில் 180 க்கு மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். புதுடெல்லியில் ஒன்பதாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் யோகா பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ராஜ் பவனில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் பேசிய ஆளுநர் தமிழகத்தின் பாரம்பரிய ‘யோகா கலை’ நமக்கு பெருமை சேர்த்துள்ளது என்றார்.