ஜி கொயர் நிறுவனத்திற்கு வருமானவரி துறை ஐடி ரெய்டு!

ஜி கொயர் நிறுவனத்திற்கு வருமானவரி துறை ஐடி ரெய்டு!

ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50 மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையை தலைமை இடமாகக் கொண்ட ஜீ ஸ்கொயர் நிறுவனம் கட்டுமான தொழிலில் முன்னணியாக  செயல்பட்டு வருகிறது. நிலங்களை வாங்கி பிளாட் போட்டு குடியிருப்புகளாக செய்து வரும் தொழிலை இந்நிறுவனம் மேற் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தில் சி.எம்.டி.ஏ சார்பில் வீடுகள் கட்ட உடனடியாக அனுமதி வழங்கப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார் வந்துள்ளது. மேலும் ஒரே நேரத்தில் அதிக அளவு  நிலங்களை கையாளப்பட்டதாகவும், குறைந்த காலகட்டத்தில் அதிக வருமானம் ஈட்டியதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சோதனையை  மேற்கொண்டனர். தமிழ்நாட்டில் சென்னை கோயம்புத்தூர் திருச்சி ஓசூர் உள்ளிட்ட இடங்களிலும் பெங்களூர் ஹைதராபாத் போன்ற இடங்களிலும் சோதனை அதிரடியாக மேற்கொள்ளப்பட்டது. 

வருமான வரித்துறையானது சுதிர், பிரவீன் ,பாலா, ஆதவ், அர்ஜூன் மற்றும் அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகனின் மருமகன் கார்த்திக்  போன்ற ஜி ஸ்கொயர் தொடர்புடைய முக்கிய பொறுப்பில் உள்ள பிரமுகர்கள் வீடுகளிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிறுவனம் வாங்கி இருக்கக்கூடிய இடங்களுடைய நில விவர பத்திரங்கள், வங்கி பரிவத்தனைகள் தொடர்பாக வருமான வரிதுறையினர்  குழுக்களாக பிரிந்து சோதனையை மேற்கொண்டனர். கடந்த ஒரு வாரங்களாக சோதனைகள் மேற்கண்ட நிலையில் இந்த ஆவணங்கள் பற்றிய தகவல்களை வருமான வரி துறையே வெளியிடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

 

Related post

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை சோதனை ஆய்வு!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை சோதனை ஆய்வு!

தமிழ்நாட்டில் டிஜிபி சங்கர் சிவால் தலைமையில் காவல்துறை சோதனை ஆய்வை நடத்தி வருகிறது. கேரளா மாநிலம் எர்ணாகுளா பகுதியில் நேற்றைய தினம் கிறிஸ்துவ அரங்கத்தில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில்…