ஜவான் திரைப்படம் அதிக வசூல் படைத்து சாதனை!

ஜவான் திரைப்படம் அதிக வசூல் படைத்து சாதனை!

ஜவான் திரைப்படம் அதிக வசூல் படைத்து சாதனை! ஜவான் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே  அதிக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஜவான் திரைப்படம் உருவாகியுள்ளது.  ஜவான் திரைப்படத்தின் மூலம் தமிழ் இயக்குனர் அட்லி பாலிவுட் இயக்குனராக பிரபலமாகியுள்ளார். ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். தீபிகா படுகோனே,விஜய் சேதுபதி,யோகி பாபு மற்றும் பிரியாமணி   உள்ளிட்டோர் இந்தப் படத்தில் முதன்மை  கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜவான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களும் பாலிவுட்டில் இணைந்துள்ளனர்.

இந்தப் படம் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் வெளிவர உள்ளது. இந்தப் படத்தில் ஷாருக்கான் இரு வேடங்களில் நடித்துள்ளார்.  ஜவான் திரைப்படத்தினை ஷாருக்கானின் மனைவி கவுரி  கான் தயாரித்துள்ளார்.  ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸ் எனத் தகவல் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது இதன்  ஓ.டி.டி   இசை மற்றும் திரையரக வெளிநாட்டு உரிமம் ஆகியன ரூபாய் 400 கோடிக்கு மேலாக விற்கப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளது. எனவே ஜவான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகுவதற்கு முன்னரே அதிக வசூலித்து சாதனை படைத்துள்ளது.பாலிவுட்சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் பதான் படத்திற்குப் பிறகு ‘ஜவான்’ திரைப்படம் உலகளவில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது!

Related post

ஜவான் திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூல்!

ஜவான் திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூல்!

ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி ஜவான் திரைப்படம் உலக திரையரங்களில் வெளியானது. இத்திரைப்படத்தில் நயன்தாரா, பிரியாமணி முக்கிய கதாபாத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்திலும் தீபிகா…
நீர் மூழ்கி குண்டுவெடிப்பு சோதனையில் இந்திய கடற்படை சாதனை படைப்பு!

நீர் மூழ்கி குண்டுவெடிப்பு சோதனையில் இந்திய கடற்படை சாதனை படைப்பு!

நீர் மூழ்கி குண்டுவெடிப்பு சோதனையில் இந்திய கடற்படை சாதனை படைப்பு! நீர் மூழ்கி குண்டு வெடிப்பு பரிசோதனை மேற்கொண்டு இந்தியா கடற்படை சாதனை படைத்துள்ளது . மத்திய அரசின்…