சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் நடராஜன் கிரிக்கெட் மைதானம் திறப்பு விழா!

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் நடராஜன் கிரிக்கெட் மைதானம் திறப்பு விழா!

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் நடராஜன் கிரிக்கெட் மைதானம் திறப்பு விழா. நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் (ஜூன்23) இன்று திறந்து வைத்தார். கடந்த 2020 ஆம் ஆண்டில் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சன்ரைஸ் ஹைதராபாத் அணிகளில் சிறப்பு வீரராக விளையாடி அசத்தியவர்          டி.நடராஜன். கிரிக்கெட் வீரர் நடராஜன் அகாடமி மூலம் தனது கிராமத்தில் கிரிக்கெட் மீது ஆர்வமுள்ள இளைஞர்களை அதிகளவில் உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டார். இதற்காக  நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டத்தில் சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த நடராஜன் கிரிக்கெட் மைதானம் நான்கு சென்ட்டர் பிட்ச்சுகள், இரண்டு பயிற்சி தடங்கள், ஜிம், கேன்டீன் மற்றும் 100 பார்வையாளர்கள் அமரும் அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை இன்று இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் முன் நின்று திறந்து வைத்தார். இந்த கிரிக்கெட் திறப்பு விழாவில் கிரிக்கெட் வீரர்  வருண் சக்கரவர்த்தி, காமெடி நடிகர் யோகி பாபு, புகழ் ,தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அசோக் சிகாமணி,காவல் துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related post