தமிழ்நாட்டில் கடந்த வாரத்தில் பெஞ்சமல் புயலால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்தது இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். இதைத்தொடர்ந்த பேரிடர் மீட்பு பணிகளை தமிழக அரசு செய்து வருகிறது.. இதன் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புயல், வெள்ளத்தில் பகுதி சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீடாக ரூ.10,000 வழங்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்குப் பதிலாக கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை அளிக்க, நெற்பயிர் உள்ளிட்ட பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17,000 வழங்கவும் ஆணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது