செல்போனில் எமர்ஜென்சி அலாட்-மக்கள் அச்சம் தேவையில்லை!

செல்போனில் எமர்ஜென்சி அலாட்-மக்கள் அச்சம் தேவையில்லை!

நாடு முழுவதும் செல்போன்களில் எமர்ஜென்சி அலாட் மக்கள் அச்சம் தேவையில்லை. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி போன்ற மாவட்டங்களில் இன்று காலை 11.27 மணிக்கு செல்போன்களில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதற்காக பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது. மேலும் பேரிடர் இழப்புகளான சுனாமி ,புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்றவற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக மெசேஜ் அலாட் எனும் திட்டத்தின் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. இதற்கான குறுந்தகவல் நேற்றைய தினம் அனைத்து செல்போன்களிலும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை, மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மையும், மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து மெசேஜ் அலர்ட் சோதனை திட்டத்தினை இன்று தொடங்கியுள்ளது.செல்போனில் அபாய எச்சரிக்கை ஒலியைக் குறித்து‌ பொதுமக்கள் அச்சப்படத்தேவை இல்லை என்ற தகவலினை தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Related post