சென்னை,திருவள்ளூர்,ராணிப்பேட்டை,வேலூரமற்றும்செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக இன்று விடுமுறை எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்றய முன்தினம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்றைய காலை முதல் லேசான மழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் விடிய விடிய மழை பெய்து கொண்டிருக்கிறது. சென்னையில் மீனம்பாக்கம், நங்கநல்லூர், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், ஆலந்தூர் ,கிண்டி ,சைதாப்பேட்டை, அடையாறு, பட்டினப்பாக்கம், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, புரசவாக்கம் மற்றும் வேப்பேரி ஆகிய பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது.
இந்த கனமழை காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் நீர் தேக்கங்களாக காணப்படுகின்றன. தென்மேற்கு வங்கக் கடல் சுழற்சி காரணமாக கடலோரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது எனத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த மழை 2 அல்லது 3 நாட்கள் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம்,ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.