சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா வெகு விமர்சை!

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா வெகு விமர்சை!


சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி மாத திருவிழா வெகுவிசையாக கொண்டாடப்படுகிறது. இக்கோயிலில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு மார்ச் 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது . சென்னை கபாலீஸ்வரர் கோயில் முக்கிய நிகழ்வாக மார்ச் 22ஆம் தேதி தேரோட்ட விழா ,23ஆம் தேதி 63 நாயன்மார்கள் திருவீதி உலா ,மார்ச் 25ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம், மார்ச் 26 தேதி உமா மகேஸ்வரர் தரிசனமும் ,மார்ச் 27ஆம் தேதி திருமுழுக்குடன் விழா நடைபெறுகிறது.

இவ்விழாவில் தேரோட்ட விழாவை காண்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பதால் சென்னை மயிலாப்பூரில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

Related post