சென்னை பூந்தமல்லியில் பிரம்மாண்டமான திரைப்பட நகரம் அமைக்கப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை பூந்தமல்லியில் பிரம்மாண்டமான திரைப்பட நகரம் அமைக்கப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்தப் பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதை தொடர்ந்து சென்னை பூந்தமல்லியில் 150 ஏக்கரில் மிகப்பிரமாண்டமான ரூபாய் 500 கோடி மதிப்பீட்டில் அதி நவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும் என அறிவித்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு சகல வசதிகளுடன் அதிநவீனத் திரைப்பட நகரத்தில், VFX, அனிமேஷன் (Animation)மற்றும் (LED Wall) போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன்படப்பிடிப்புத் தளங்கள், படப்பிடிப்பு வேலைகளான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கான கட்டமைப்புகள் அமைக்கப்படும் என்றார்.

மேலும் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் இந்தப் பிரம்மாண்ட திரைப்பட நகரம் உருவாக்கப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார் இதனைத் திரைத்துறையினர் அனைவரும் வரவேற்றுள்ளனர்.

Related post

குடிசை இல்லா தமிழ்நாடு இலக்கு- சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு

குடிசை இல்லா தமிழ்நாடு இலக்கு- சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழக நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு (பிப்ரவரி 19)இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு…
மின்கட்டணம் செலுத்த டிசம்பர் 18 வரை கால அவகாசம்  நீட்டிப்பு -அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

மின்கட்டணம் செலுத்த டிசம்பர் 18 வரை கால அவகாசம் நீட்டிப்பு -அமைச்சர்…

தமிழ்நாட்டில் மின் நுகர்வோருக்கான மின் கட்டணம் டிசம்பர் 18ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக்ஜாம்…
டி என் பி சி தேர்வின் மூலம் 6000 பேருக்கு பணி நியமன ஆணை!

டி என் பி சி தேர்வின் மூலம் 6000 பேருக்கு பணி…

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் டி என் பி சி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. டிஎன்பிசி தேர்வின் மூலம் 6000 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கப்படும் என…