சென்னை தலைமை செயலகத்தில் மத்திய குழுவுடன் தமிழக முதலமைச்சர் ஆலோசனை!

சென்னை தலைமை செயலகத்தில் மத்திய குழுவுடன் தமிழக முதலமைச்சர் ஆலோசனை!

மிக்ஜாம் புயல் காரணமாக பாதிப்படைந்த பகுதிகளை மத்திய குழு வருகை தந்து இரண்டு நாட்களாக ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் மிக்ஜாம் புயலின் பேரிடர் மீட்பு பணியைக் குறித்து தமிழக அரசுக்கு மத்திய குழு பாராட்டுத் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் மத்திய குழுவுடன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை நடத்தினார் .இந்தக் கூட்டத்தின் போது சென்னை ,திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் புயல் மற்றும் வெள்ள பாதிப்புக்களால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.வெள்ள பாதிப்புக்குள்ளான இடங்களில் மக்களின் நலன் மேம்பாட்டுக்காக நிரந்தரமான ரூபாய் 12, 6 59 கோடி நிவாரணம் தொகை தேவை எனக் கோரிக்கை வைத்தார். தொடர்ந்து தற்காலிக நிவாரணமாக ரூபாய் 7033 கோடி வழங்குமாறு முதலமைச்சர் மத்திய குழுவிடம் வலியுறுத்தினார்.

தமிழக அரசு கோரிய புயல் நிவாரண தொகையை ஒன்றிய அரசு பெற்று தருமாறு மத்திய குழுவிடம் தெரிவித்தார் .மேலும் மத்திய குழு தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க ஒன்றிய அரசின் உதவி தேவை என்றும் தெரிவித்தார்.

Related post

தமிழகத்தில் சிறப்பு வணிக கடன் திட்ட முகாம்கள்!

தமிழகத்தில் சிறப்பு வணிக கடன் திட்ட முகாம்கள்!

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் போன்ற 4 மாவட்டங்களில் சிறு தொழில்கள் செய்யும் மக்களின் வாழ்வாதாரம் சேதமடைந்த நிலையில் மீட்பதற்காக அரசு பல…
தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் தமிழக முதலமைச்சர்!

தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் தமிழக முதலமைச்சர்!

மிக்ஜாம் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறந்த முறையில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையைத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சி சென்னையிலுள்ள ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. சென்னை…
சென்னையில் அனைத்து குடும்பங்களும் 6000 நிவாரணத் தொகை!

சென்னையில் அனைத்து குடும்பங்களும் 6000 நிவாரணத் தொகை!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை பெரு நகரத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. .இதனால் சென்னையில் உள்ள அனைத்து குடும்பத்தார்களுக்கும் 6000 நிவாரணத் தொகை வழங்கப்படுவதாக தமிழக…