சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிசம்பர் 24ஆம் தேதி தமிழ் திரையுலக சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழா!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிசம்பர் 24ஆம் தேதி  தமிழ் திரையுலக சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழா!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற டிசம்பர் 24ஆம் தேதி தமிழ் திரையுலக சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக கட்சி தலைவர்களின் சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ் திரையுலகில் சார்பாக ‘கலைஞர் 100 விழா ‘ மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. தமிழ் திரைப்படத்துறையில் உள்ள அனைவருக்கும் ‘கலைஞர் 100 ‘ விழாவிற்காக அழைப்பிதழ் விடுக்கப்பட்டுள்ளது .இந்த நிலையில் தமிழ் திரைப்படத் துறையில் மிகப்பெரிய நடிகர்களான ரஜினி, கமல் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி, செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, ஆகிய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் நேரில் சென்று அழைத்தனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார். எனவே தமிழ் திரையுலக சார்பாக நடத்தப்படும் ‘கலைஞர் 100 விழா’ பிரம்மாண்டமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related post

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 23 முதல் தொடக்கம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 23…

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 26 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டனிஸ் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது .இந்தப் போட்டிக்கான…
கலைஞர் நூற்றாண்டு விழாவின் தொடர்ச்சியாக 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது

கலைஞர் நூற்றாண்டு விழாவின் தொடர்ச்சியாக 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நினைவாக ரூ.100 நாணயம் வெளியிடப்படுவதாக தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய நிதி அமைச்சகம் பரிசீலித்து…
தீவுத்திடலில் உணவுத் திருவிழா! செப்டம்பர் 16 ,17, 18 ஆகிய நாட்களில்…

தீவுத்திடலில் உணவுத் திருவிழா! செப்டம்பர் 16 ,17, 18 ஆகிய நாட்களில்…

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தீவுத்திடலில் உணவுத் திருவிழா செப்டம்பர் 16, 17, 18 ஆகிய நாட்களில் நடைபெறவிருக்கிறது. உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகமும்  இணைந்து…