சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் விநாடிக்கு 1000கன அடி உபரி நீர் வெளியேற்றம்!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் விநாடிக்கு 1000கன அடி உபரி நீர்  வெளியேற்றம்!

வடகிழக்கு பருவமழையால் சென்னை உள்ளிட்ட பல ஏரிகளில் நிரம்பி வருகின்றன.சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி ,சோழவரம் ,புழல் ,கண்ணன் கோட்டை, தேர்வாய் கண்டிகை செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகளில் நீர் நிரம்பி வருகிறது. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் விநாடிக்கு 1000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது..

இந்த நிலையில் சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் 24 கன அடி கொள்ளளவு கொண்ட ஏரியில் தற்போது 22 கனஅடி நீர் நிரம்பி வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியில் வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக குன்றத்தூர், திருமுடிவாக்கம், சைதாப்பேட்டை, கோட்டூர் மற்றும் அடையாறு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related post

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பு

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.வடகிழக்கு பருவமழையால் சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பு வருகிறது. சென்னைக்கு நகர வாசிகளுக்காக குடிநீர் வழங்கும் ஏரியாக செம்பரபாக்கம்…