சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி !

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில்  வெற்றி !

சென்னை கீழ்ப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் 2023 கிரிக்கெட் ஆட்டத்தில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை  அணியின் கேப்டனான தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.  முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான ஹேரி  ப்ரூக் 18 ரன்கள், அபிஷேக் சர்மா 34 ரன்கள் எடுத்தாலும்.சென்னையின் பந்துவீச்சை சமாளிக்க திணறிய ஐதராபாத் வீரர்கள் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.       இறுதியாக 20 ஓவர்களில் 7 விக்கெட்களை வீழ்த்தி 134 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இரண்டாவதாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்அணியின்  வீரர்களான ருது ராஜ் ,கெயிக்  வாட் மற்றும் டெவோன் கான்வே விளையாடி 87ரன்கள் ஸ்கோர் செய்தனர். ருதுர் ராஜ் அவுட்டாகி வெளியேறிய பின்னர் வந்த அம்பதி ராயுடு 9 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் ஒரு பக்கம் விழுந்து கொண்டே இருந்தாலும் இடைவிடாமல் தொடக்க வீரரான டெவோன் கான்வே  சிறப்பாக விளையாடி 77ரன்கள் குவித்தார்.எதிரணியின் ஸ்கோர் 134 ஐ விட 138 என அதிகமான ஸ்கோரை எடுத்து ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த விறுவிறுப்பான ஆட்டத்தினை பார்ப்பதற்கு அரசியல் பிரபலங்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் உள்பட பலர் வருகை தந்திருந்தனர்.

 

Related post