சென்னை கிண்டி சிறுவர் பூங்கா 6 மாதங்களுக்கு மூடப்படும். சென்னை கிண்டியில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா ஜூன் 19 முதல் தொடர்ந்து 6 மாதங்களுக்கு மூடப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த சிறுவர் பூங்கா ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. பின்னர் நமதுநாடு சுதந்திரம் பெற்ற பின் நமது ஜவஹர்லால் நேருவால் 1958 ஆம் ஆண்டு தேசிய சிறுவர் பூங்காவாக மாற்றியமைக்கப்பட்டது. இதில் மான்கள்,குரங்குகள்,மயில்கள் முயல்கள், எனப் பல வனஉயிரினங்கள் பராமரிக்கப்படுகின்றன. மேலும் மக்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வந்து செல்லும் வகையில் பிரபலமடைந்த சுற்றுலா தளமாக இடம் பெற்றது . தற்போது இந்த சிறுவர் பூங்கா சேதமடைந்து பொலிவிழந்து காணப்படுகிறது.
இந்த சிறுவர் பூங்காவினை மாற்றியமைக்கும் பணியில் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சென்னை கிண்டியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவை இயற்கை கல்விக்கான முதன்மை மையமாக மாற்றவும் ,வன உயிரினங்களை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சர்வதேச அளவில் தரம் உயர்ந்ததாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிப்பதற்காக ஜூன் 19ஆம் தேதி முதல் ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து சென்னை கிண்டி சிறுவர் பூங்கா மூடப்படும் எனத் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.